இலங்கை
நாட்டில் சிறிய அளவிலான அரிசி ஆலைகளை நிறுவ முடிவு!

நாட்டில் சிறிய அளவிலான அரிசி ஆலைகளை நிறுவ முடிவு!
வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சினால் நாட்டில் 160 சிறிய அளவிலான அரிசி ஆலைகளை நிறுவ முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் ஒரு அரிசி ஆலையில் தினமும் 5000 கிலோ அரிசி உற்பத்தி செய்ய முடியும்.
இந்த அரிசி ஆலைகளின் செயல்பாடு மகளிர் அமைப்புகளுக்கு வழங்கப்படவுள்ளது.
அதன் பின்னர் அவர்கள் தமது உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடர்வார்கள் எனவும் இதன் மூலம் பெண் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார்.[ஒ]