இலங்கை
நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண்!

நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண்!
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (15-01-2025) இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக் கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
இதுவரை குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.