Connect with us

சினிமா

பிக்பாஸ் வாய்ப்பிற்காக 8 வருட போராட்டம்.. யார் இந்த சௌந்தர்யா.?

Published

on

Loading

பிக்பாஸ் வாய்ப்பிற்காக 8 வருட போராட்டம்.. யார் இந்த சௌந்தர்யா.?

பிக்பாஸ் சீசன் 8-ல் க்யூட்டான போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் சௌந்தர்யா. இவர் விஷ்ணுவின் காதலி, லெஸ்பியன், மிமிக்கிரி பிளேயர் என பல கேலி கிண்டல்கள் விமர்சனங்களை தாண்டி அனைவரையும்  திரும்பி பார்க்க வைத்த ஒரு பெண்ணாக காணப்படுகிறார்.இவர் தனக்கு வரும் கேலி கிண்டல்களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் தனது ரியாக்ஷன் மூலம் பதில் சொல்லும் பிக் பாஸின் டெக்கினிக்கல் பிளேயராக காணப்படுகிறார். மக்களின் ஆதரவால் சவுண்டென சத்தமாக அழைக்கப்படும் சௌந்தர்யா தற்போது பிக்பாஸில் கலக்கி வருகிறார்.1995 இல் கர்நாடகா பெங்களூர்ல பிறந்த இவர், சின்ன வயசிலையே சென்னைக்கு வந்துள்ளார். அங்கையே ஸ்கூல், காலேஜ் என்பவற்றை முடித்துள்ளார். சின்ன வயதில் இருந்தே தனது வாய்ஸால் பல சர்ச்சைகளை சந்தித்து உள்ளார் சௌந்தர்யா.இது தனது கேரியருக்கு பாதிப்பாக அமையும் என தெரிந்தும் தைரியமாக மீடியாவுக்குள் நுழைந்து உள்ளார்.  சௌந்தர்யாவுக்கு டிரஸ் டிசைனிங் ரொம்ப பிடிக்குமாம். அதனாலயே காலேஜில் படிக்கும் போது சின்ன சின்ன ஷார்ட் பிலிம்ஸ், மாடலிங் என களம் இறங்கி உள்ளார். 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றில் சௌந்தர்யா பங்கு பற்றி இருந்தார். ஆனால் அதில் பார்ப்பதற்கு தலைமுடியை கட்டையாக வெட்டி ஆண்களின் தோற்றத்தில் காணப்பட்டார்.அந்தபின்பு 90 எம்எல் என்ற படத்தில் நடித்துள்ளார் சௌந்தர்யா. மேலும் தர்பார், ஆதித்ய வர்மா, காலங்களில் அவள் வசந்தம் போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ளார். சௌந்தர்யாவுக்கு அப்போதிலிருந்தே பிக் பாஸில் பங்கு பற்ற வேண்டும் என்ற ஆர்வம் காணப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான வேற மாதிரி ஆபீஸ் என்ற வெப் சீரியலில் சௌந்தர்யா நடித்திருந்தார். அதில் விஷ்ணு விஜயையும் நடித்துள்ளார். இந்த வெப் சீரியலில் நடித்த பிறகு சௌந்தர்யாவுக்கு என்று மிகப்பெரிய ஃபேன்ஸ் பேஜ்  உருவானது.  வேற மாதிரி ஆபீஸ் சௌந்தர்யாவின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது.இந்த வெப் சீரியலின் மூலமே சௌந்தர்யாவுக்கும் விஷ்ணுவுக்கும் நெருங்கிய பழக்கம்  ஏற்பட்டுள்ளது. இதன் போது எழுந்த விமர்சனங்களுக்கு ஒரு ஆணும் பெண்ணும் இறங்கி பழகக் கூடாதா என சௌந்தர்யா பதிலடி கொடுத்திருந்தார். அத்துடன் பிக் பாஸ் சீசன் 7ல் விஷ்ணு விஜய் பங்கு பற்றிய நிலையில், அவர் ரெகமெண்ட் பண்ணிதான் சௌந்தர்யாவுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்பட்டது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் சௌந்தர்யா என்ட்ரி கொடுத்த போது விஜய் சேதுபதியிடம் தான் மாடலிங் ஆக இருந்தபோதிலும் என்னுடைய குரலால் பல இடங்களில் அவமானப்பட்டு உள்ளேன். அதனாலதான் நான் மிமிக்ரி பண்ணி பேசிக்கிட்டு இருக்கேன் என மிகவும் எமோஷனலாக சொல்லியிருந்தார். அதற்கு விஜய் சேதுபதி உங்களுடைய சொந்த குரலே நன்றாக இருக்கு என அவருக்கு தைரியம் கொடுத்து அனுப்பி இருந்தார்.பிக்பாஸிலும் சௌந்தர்யா எதிலும் பெரிதாக ஆர்வம் காட்டாதவராக இருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவத்தை பற்றி தெரிவித்திருந்தார். அதன் பின்பு சௌந்தர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவர்களுடைய பேக்கரியும் ரொம்பவே பேமஸ் ஆகியுள்ளது.தற்போது பிக்பாஸ் சீசன் எட்டில் இறுதி பைனலுக்கான போட்டியில் சௌந்தர்யாவும் முக்கிய போட்டியாளராக காணப்படுகிறார். இவர் வெற்றி பெற வேண்டும் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனவே சௌந்தர்யாவின் 8 வருட போராட்டத்திற்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்..

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன