இலங்கை
பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப விசேட போக்குவரத்து!

பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப விசேட போக்குவரத்து!
தைப்பொங்கல் தினத்தைக் கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்குத் தேவையான போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் ,காங்கேசன்துறை மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களிலிருந்து 3 விசேட தொடருந்துகளை இன்று சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.[ஒ]