சினிமா
மொட்டை மாடியில் ரம்யா பாண்டியன் விட்ட காத்தாடி.. பலரின் கவனம் ஈர்த்த போட்டோஸ்

மொட்டை மாடியில் ரம்யா பாண்டியன் விட்ட காத்தாடி.. பலரின் கவனம் ஈர்த்த போட்டோஸ்
பிரபல நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் லவல் தவால் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். யாருமே எதிர்பாராத வகையில் தனது காதலை அறிவித்த ரம்யா பாண்டியன், ஒரே மாதத்தில் தன்னுடைய திருமண அறிவைப்பையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.இதைத்தொடர்ந்து இவர்களுடைய திருமணம் ரிஷிகேசில் உள்ள கங்கை நதிக்கரையில் மிக எளிமையாக நடைபெற்றது. அதில் இரு வீட்டார்களும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அதன் பின்பு இவர்களுடைய திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது.d_i_aவடநாட்டில் பெரிய குடும்பத்திற்கு மருமகளாகி சென்ற ரம்யா பாண்டியன் தமிழ்நாட்டு முறைப்படி தாலி கட்டிக் கொண்டுள்ளார். அதன் பின்பு ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்ற புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக காணப்படும் ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு பிறகு திரை உலகில் இருந்து முழுமையாக விலகுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இது தொடர்பில் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.இந்த நிலையில், நடிகர் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டம் விடும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் பலரின் கவனம் ஈர்த்து வருகின்றன.