இலங்கை
யாழ். வல்வெட்டித்துறையில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!

யாழ். வல்வெட்டித்துறையில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்லை உதயசூரியன் கழகமும் இணைந்து நடத்திய வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர சர்வதேச பட்டப்போட்டி உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்று மதியம் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இடம்பெற்றது.
இதன் போது இலங்கை அரசின் தூய இலங்கை என்ற பெயரைப் பொறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் இளைய தளபதி விஜயின் உருவப்படம் பொறித்த ஒரு நூலில் இரட்டைப் பட்டங்கள் மூன்றாமிடத்தைப் பிடித்துக்கொண்டது.
இதனைக் கண்டுகழிக்க பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக வெளிநாட்டவர்களும் பட்டத்திருவிழாவை பார்வையிட வந்திருந்தனர்.