வணிகம்
வாட்ஸ்அப் மூலம் மினி ஸ்டேட்மெண்ட் பெறலாம்; எஸ்.பி.ஐ வங்கி புதிய அறிவிப்பு

வாட்ஸ்அப் மூலம் மினி ஸ்டேட்மெண்ட் பெறலாம்; எஸ்.பி.ஐ வங்கி புதிய அறிவிப்பு
எஸ்.பி.ஐ வங்கி YONO ஆப் உள்ளது. YONO ஆப் மூலம் மினி ஸ்டேட்மெண்ட் பார்க்க முடியும். பாஸ்வேர்ட் மறந்து விடுவதால் பலரும் இதை பார்க்க முடியாமல் போகிறது. ஆப்-ல் மற்ற வசதிகைளயும் பயன்படுத்த முடியாமல் போகிறது. இதற்கு மாற்றாக எஸ்.பி.ஐ வங்கி புதிய வசதி அறிமுகம் செய்கிறது. இன்டர்நெட் சேவை இல்லாமலே மினி ஸ்டேட்மெண்ட் பார்க்க முடியும். 3 வகையில் இதை செய்யலாம்.மிஸ்ட் கால், எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக மினி ஸ்டேட்மெண்ட் பெற முடியும். மிஸ்ட் கால் மூலம் மினி ஸ்டேட்மெண்ட் தெரிந்து கொள்ள எஸ்.பி.ஐ வங்கி கணக்குடன் நீங்கள் பதிவு செய்ய எண்ணில் இருந்து 9223866666 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு கால் செய்யவும். அதன் பின் அழைப்பு துண்டிக்கப்பட்டு எஸ்.எம்.எஸ் மூலம் மினி ஸ்டேட்மெண்ட் வரும். எஸ்.எம்.எஸ் மூலம் பெற MIS என டைப் செய்து ஸ்பேஸ் விட்டு உங்கள் அக்கவுண்ட் எண் டைப் செய்து 9223866666 இந்த எண்ணிற்கு அனுப்ப வேண்டும். அடுத்ததாக, வாட்ஸ்அப் மூலம் பெற இந்த எண்ணிற்கு 91-9022390229 வாட்ஸ்அப்-ல் மெசேஜ் அனுப்பவும். இதை செய்யலாம் கடைசி 4 டிரான்ஸாக்ஷன் பற்றிய மினி ஸ்டேட்மெண்ட் வரும்.