சினிமா
வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்கும் சூரி! பர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த “மாமன்” படக்குழு

வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்கும் சூரி! பர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த “மாமன்” படக்குழு
காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய “விடுதலை பாகம் 1′ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அபாரமான நடிப்பினால் மக்கள் மனங்களை வெற்ற ஹீரோவாக இருக்கிறார். இந்நிலையில் விடுதலை தந்த வெற்றி தொடர்ந்து, ‘கருடன், கொட்டுக்காலி”விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு காமிட்டனர்.இந்த படத்திற்கு “மாமன்” என்று பெயரிட்ட நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காமெடியனாக கலக்கிய இவர் தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.