இலங்கை

13ஆவது திருத்தச்சட்டத்தில் கைவைக்க முனையவில்லை! தமிழ்நாட்டில் சந்திரசேகர்

Published

on

13ஆவது திருத்தச்சட்டத்தில் கைவைக்க முனையவில்லை! தமிழ்நாட்டில் சந்திரசேகர்

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

 சென்னையில் நடைபெற்ற அயகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Advertisement

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 தமிழ் மக்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்றார்கள் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது.

அதனடிப்படையில் தான் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளீர்த்திருந்தோம்.

Advertisement

அதுமட்டுமன்றி, 13ஆவது திருத்தச்சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் காணப்படுகின்றது.

 அந்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதோடு அதனையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

 மேலும், தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கும் விடயமாக 13ஆவது திருத்தச்சட்டத்தினையும்,

Advertisement

மாகாண சபை முறைமையும் கருதுகின்றபோது அதனை அர்த்தபுஷ்டியான நிருவாகக் கட்டமைப்பாக செயற்படுத்திப் பார்ப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். என தெரிவித்தார்.

 மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version