இலங்கை
குருநகரில் நேற்றிரவு திடீர் சுற்றிவளைப்பு!

குருநகரில் நேற்றிரவு திடீர் சுற்றிவளைப்பு!
பொதுமக்கள் மத்தியில் அச்சம்
யாழ்ப்பாணம் – குருநகர்ப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர், பொலிஸார், இராணுவத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிக்கப்பட்டு நேற்று இரவிரவாகத் தேடுதல்களும் சுற்றிவளைப்பும் முன்னெடுக்கப்பட்டன.
குருநகர்ப் பகுதிக்குள் எவரும் நுழையாதவாறும், எவரும் இலகுவில் குருநகருக்குள் இருந்து வெளியில் வர முடியாதவாறும் வீதித் தடைகள் போடப்பட்டிருந்ததுடன், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மோப்பநாய்கள் சகிதம் தேடுதல்கள் இடம்பெற்றன. எனினும், என்ன காரணத்துக்காக இந்தத் தேடுதல்கள் இடம்பெறுகின்றன என்று தெரிவிக்கப்படவில்லை.