இலங்கை
தொலைபேசி வயர்கள் நெல்லியடியில் அறுப்பு; பொலிஸார் அசமந்தம் – பொதுமக்கள் சாடல்

தொலைபேசி வயர்கள் நெல்லியடியில் அறுப்பு; பொலிஸார் அசமந்தம் – பொதுமக்கள் சாடல்
நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், தொலைபேசி இணைப்பு வயர்கள் விஷமிகளால் அறுத்தெடுக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் சிலர் வயர்களை அறுத்து, அவற்றுக்குள் உள்ள செப்புக் கம்பிகளை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர் என்று பொலிஸாரிடம் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட தடவைகள் முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இதைத் தொடர்ந்தே நேற்றுமுன்தினமும் ஒரு தொகுதி வயர்கள் அறுக்கப்பட்டுள்ளன. இதுவரை அறுக்கப்பட்ட வயர்களின் ஒட்டுமொத்தப் பெறுமதி 12 லட்சம் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.