Connect with us

சினிமா

பொங்கல் வின்னரான விஷாலுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published

on

Loading

பொங்கல் வின்னரான விஷாலுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்தான் விஷால். அதன் பின்பு தாமிரபரணி, சண்டைக்கோழி, திமிரு என வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்தார்.  நடிகர் விஷால் முதலில் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார். ஹீரோவாக அறிமுகமான பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தவர், நல்ல ஆக்சன் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் விஷாலின் ஆக்சன், சண்டை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது.எனினும் தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்த விஷாலுக்கு திடீரென சறுக்கல் ஏற்பட்டது. அதன் பின்பு பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.இதற்கு இடையே சுந்தர். சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா படத்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் காணப்படுகின்றார்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்த போதும் நிதி பிரச்சனை காரணமாக கிடப்பில் போடப்பட்டு தற்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.இந்த நிலையில், பொங்கல் வின்னராக மதகஜராஜா திரைப்படம் பல கோடி ரூபாய்களை வசூலித்து வரும் நிலையில் இந்த படத்திற்காக விஷால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் இதுவரையில் 20 கோடிகளை வசூலித்து இருப்பதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன