இலங்கை
போதையில் தள்ளாடிய 2 மாணவர்கள் கைது!

போதையில் தள்ளாடிய 2 மாணவர்கள் கைது!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் போதை மாத்திரை உட்கொண்ட நிலையில் பொலிஸாரால் கைது நேற்றுக் செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கு போதை மாத்திரை விநியோகத்தில் ஈடுபட்ட குழுவினரைக் கைது செய்யும் நடவடிக்கைளை பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனைகள் அதிகளவில் இடம்பெறுகின்றன என்று தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.