இலங்கை
மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு!

மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு!
மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தனர் என்பது தெரியவந்தது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.