Connect with us

பொழுதுபோக்கு

ரொமான்ஸ், ஆக்ஷன் அசத்தல்: விடா முயற்சி நியூ டிரெய்லர் வைரல்; ரிலீஸ் எப்போ தெரியுமா?

Published

on

Ajith Vida Muyarchi

Loading

ரொமான்ஸ், ஆக்ஷன் அசத்தல்: விடா முயற்சி நியூ டிரெய்லர் வைரல்; ரிலீஸ் எப்போ தெரியுமா?

அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடா முயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியுடன், டிரெய்லர் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் அஜித்குமார், கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் துணிவு என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதன்பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.அஜித்துடன், அர்ஜூன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், விடா முயற்சி படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த சமயத்தில் அஜித், சமீபத்தில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில். குட் பேட் அக்லி என்ற படத்தில் கமிட் ஆகி நடித்து முடித்துள்ளார். .குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இடையில் விடா முயற்சி படத்தை கையில் எடுத்த லைகா நிறுவனம் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படம், தீபாவளி தினத்தில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. தவிர்க்க முடியாத சில காரணங்களால், தீபாவளி தினத்தில் படம் வெளியாகவில்லை என்று கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து விடா முயற்சி படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான டீசரும் வெளியிடப்பட்டது. வசனங்கள் இல்லாமல் முற்றிலும் ஆக்ஷன் கட்சிகளுடன் கட் செய்யப்பட்டுள்ள இந்த டீசர் முழுவதும் அஜித் மட்டுமே ஆக்கிரமித்துள்ளார். டீசரின் முடிவல், 2025 பொங்கல் தினத்தில் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், கடைசி நேரத்தில் விடா முயற்சி பொங்கல் ரேசில் இருந்து விலகியது. இதனால் விடா முயற்சி வெளியாகுமா? எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது இந்த படம் பிப்ரவரி 6-ந் தேதி வெளியாகும் என்ற அறிவிப்புடன் படத்தின் டிரெய்லர், வெளியாகியுள்ளது. முதலில் ரொமான்ஸ் காட்சிகளுடன் தொடங்கிய இந்த டிரெய்லர், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் முடிகிறது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன