பொழுதுபோக்கு
இதுதான்டா போலீஸ் நடிகரின் மகள்: உதயநிதி பட நடிகை வைரல் க்ளிக்ஸ்; யார்னு தெரியுதா?

இதுதான்டா போலீஸ் நடிகரின் மகள்: உதயநிதி பட நடிகை வைரல் க்ளிக்ஸ்; யார்னு தெரியுதா?
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் பிறந்து ஆந்திராவில் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் டாக்டர் ராஜசேகர்.புதுமைப்பெண் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து புதிய தீர்ப்பு என்ற படத்தில் நடித்திருந்தார்.1985-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர், நடிகை ஜீவிதாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.மூத்தமகள் ஷிவானி ராஜசேகர், கடந்த 2021-ம் ஆண்டு வெளியான பெல்லி சண்டாடி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு அட்புதம் என்ற படத்தில் நடித்திருந்தார்.ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பறிவ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷிவானி, உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்க நீதி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.இந்த இரு படங்களுமே அவருக்கு கைகொடுக்காத நிலையில், மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கு சென்ற ஷிவானி, ஜிலேபி, கொட்டபொம்மில் பி.எஸ். உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷிவானி சமீபத்தில் வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.