இலங்கை
இலங்கையில் பெண் ஒருவரின் ஈவிரக்கமற்ற செயல்; பொலிஸ் விசாரணையில் அம்பலம்!

இலங்கையில் பெண் ஒருவரின் ஈவிரக்கமற்ற செயல்; பொலிஸ் விசாரணையில் அம்பலம்!
தனது 10 மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம் இலங்கையில் நடந்தேறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனுராதபுரம் ,புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக அனுராதபுரம் – ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் சடலத்தை மீட்டு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இது ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச் செயல் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை எனவும், அன்றிரவு (16) குழந்தையை வீட்டிற்கு பின்னால் உள்ள தண்ணீர் குழிக்குள் வீசி பின்னர் குழந்தையை மீட்டு, வீட்டின் கட்டிலில் வைத்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தாயே குழந்தையை கொன்ற சம்பவம் அங்கு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.