Connect with us

இலங்கை

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்!

Published

on

Loading

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்!

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று சனிக்கிழமை (18)  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

இச்சந்திப்பில், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதி பிரதானி லார்ஸ் பிரெடல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான கண்காணிப்பாளராக செயற்படும் Nacho Sanchez உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டனர்.

Advertisement

இரு தரப்புக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் பல குறித்து நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இங்கு, 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களால் நடத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு அறிக்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பு தலைமை செயற்பாடு அதிகாரி Jose Ignacio Sanchez Amor, பிரதி பிரதம கண்காணிப்பாளர் Inta Lase, சட்ட ஆய்வாளர் ஆன் மார்ல்பரோ, அரசியல் ஆய்வாளர் ரால்ப் மைக்கல் பீட்டர்ஸ் ஆகியோரும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் கலந்து கொண்டனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன