இலங்கை
காலியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

காலியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!
காலி-மாபலகம வீதியில் உள்ள தனிபொல்கஹா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாலை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீவிபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.