இந்தியா
கிச்சன் கீர்த்தனா: கிச்சியா!

கிச்சன் கீர்த்தனா: கிச்சியா!
குஜராத்வாசிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு இந்த கிச்சியா. பண்டிகைகளின்போதும் விருந்தினர்களின் வருகையின்போதும் தவறாமல் இடம்பெறும் இந்த கிச்சியாவை இந்த வார வீண்ட் ஸ்பெஷலாக நீங்களும் செய்து அசத்தலாம்.
அரிசி மாவு – ஒரு கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
ஓமம் – அரை டீஸ்பூன்
வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – இஞ்சி விழுது – அரை டீஸ்பூன்
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அலங்கரிக்க…
ஊறுகாய் மசாலா பொடி – 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
அடிகனமான பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் சீரகம், ஓமம், வெள்ளை எள், பச்சை மிளகாய் – இஞ்சி விழுது, எண்ணெய், உப்பு, சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, சமையல் சோடா, அரிசி மாவு சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் மாவைச் சிறு சிறு கொழுக்கட்டைகளாகச் செய்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். கொழுக்கட்டைகள் மீது ஊறுகாய் மசாலா பொடி தூவி, நல்லெண்ணெய் ஊற்றிப் பரிமாறவும்.