இலங்கை
செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்கு!

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்கு!
கடந்த பொதுத் தேர்தலில், அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்த வேட்பாளர்கள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்குத் தொடர தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்ட) சட்டத்தரணி சிந்தக குலரத்னவிடம் நாம் வினவிய வினவியபோது,
இந்த நாட்களில் வேட்பாளர் பட்டியல்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 134 அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு வழக்குத் தொடர்வதாக, குலரத்ன குறிப்பிட்டார்.
செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் எண்ணிக்கை எண்ணூறுக்கும் மேலதிகமாகும்.