சினிமா
சைஃப் அலிகானின் மருத்துவ செலவு மட்டும் இத்தனை லட்சமா? வெளியான புதிய தகவல்

சைஃப் அலிகானின் மருத்துவ செலவு மட்டும் இத்தனை லட்சமா? வெளியான புதிய தகவல்
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் திருடன் புகுந்து கைவரிசையை காட்டியதோடு, சைஃப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்பு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகான் தீவிர சிகிச்சைகளுக்கு பிறகு அபாய கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டு இருந்தார்கள்.பாலிவுட் திரையுலகில் டாப் ஸ்டாராக காணப்படுபவர் தான் சைஃப் அலிகான். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரபல நடிகை கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.d_i_aகடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சைஃப் அலிகான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு உள்ளே ஃபயர் எக்ஸிட் வழியாக உள்ளே நுழைந்த திருடன், அவரை ஆறு இடத்தில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சைஃப் அலிகான் திருடனை பிடிக்க முற்பட்ட போதே கத்திக்குத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சைஃப் அலிகானின் மருத்துவ செலவு மட்டும் 25 லட்சம் என தற்போது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் அவருடைய உடலில் இருந்து 2.5 இஞ்ச் அளவிலான கத்தியின் பாகம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த தகவல் தென்னிந்திய சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சைப் அலிகான் விரைவிலேயே குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.