இலங்கை
நெல்லுக்கான நிர்ணய விலை விரைவில் தீர்மானிக்கப்படும் – நாமல் கருணாரத்ன!

நெல்லுக்கான நிர்ணய விலை விரைவில் தீர்மானிக்கப்படும் – நாமல் கருணாரத்ன!
நெல்லுக்கான நிர்ணய விலை விரைவில் தீர்மானிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை – பன்கமுவ பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தென் மாகாணத்தில் சிவப்பு பச்சை அரிசி விற்பனைக்குக் காணப்படுகின்றது.
எனினும் அதனை மாலை 5 மணிக்கு பின்னரே விற்பனை செய்கின்றனர்.
அந்த சந்தர்ப்பத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் பணியை நிறைவு செய்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியதன் பின்னர் இவ்வாறு விற்பனை இடம்பெறுவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.