Connect with us

இலங்கை

பரம்பரை மேய்ச்சல் தரை காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை! மட்டு.பண்ணையாளர்கள் கவலை

Published

on

Loading

பரம்பரை மேய்ச்சல் தரை காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை! மட்டு.பண்ணையாளர்கள் கவலை

பரம்பரையாக மேய்ச்சல் தரை காணியாக பயன்படுத்தி வந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் உள்ள மேய்ச்சல் தரைகளை கொண்டுள்ள பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைக்காணிகளில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் களவிஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

இதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சுதாகர்,உதவி பிரதேச செயலாளர்,பிரதேச காணி உத்தியோகத்தர்,திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள்,கிராமசேவையாளர்கள்,பண்ணையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 இதன்போது கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் அங்கு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.

 இங்கு சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் காரணமாக கால்நடை மேய்ச்சல் தரை அழிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பகுதிக்குள் கால்நடைகள் சென்றால் பண்ணையாளர்களை தாக்குவதாகவும் சிலரை பிடித்து பணம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

 அத்தோடு வன பாதுகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் மங்கலகம பொலிசார் தங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல்களை செய்வதாகவும், லஞ்சமாக பணம் மற்றும் மதுசாரம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளை சுருக்கு வைத்து பிடிப்பதாகவும் சில சமயங்களில் கால்நடைகளை கொல்வதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

 இப்பகுதியில் சுமார் 300 க்கு மேற்பட்ட பண்ணையாளர்கள் சுமார் 150000க்கும் மேற்பட்ட தங்களது கால்நடைகளை கொண்டு செல்வதாகவும் தாங்கள் பரம்பரை பரம்பரையாக இப்பகுதியிலே கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வருவதாகவும் கடந்த சில வருடங்களாக இவ்வாறானவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

 பண்ணையாளர்கள் சிறிய கத்தியினை கையில் வைத்திருந்தாலும் கூட வன பாதுகாப்பு திணைக்களத்தினர் அவர்களை பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதுடன் தங்களுக்கான தற்காலிக கொட்டில்களை கூட அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் ஆனால் பெரும்பான்மை சமூகத்தினருக்கு இயந்திரங்களைக் கொண்டு காடுகளை அழிப்பதற்கும் கட்டிடங்களை அமைப்பதற்கும் எதுவித தடைகளும் விதிப்பதில்லை எனவும் இதன் போது பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

 குறித்த கலந்துரையாடலின் போது அப்பகுதியில் அத்துமீறி பயிற்சிகள் ஈடுபடும் நபர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியபோது தங்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றை வைத்துக் கொண்டு தாங்கள் இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

 இதன் போது பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் இணைந்து அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் ஆவணங்களை பரிசீலனை செய்வதற்காக அவற்றை எதிர்வரும் வாரம் கிராம சேவகர்களின் ஊடாக வழங்கி அவற்றை உறுதி செய்ய வேண்டுமென பயிர்ச்செய்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதுடன், பண்ணையாளர்கள் மீது அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

Advertisement

“உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும்.

 மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக மேய்ச்சல் தரைக்காணியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளை இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன்” என இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

 இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

Advertisement

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியே இந்த கெவிலியாமடு இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பெயர் தெரியாதவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து அடைத்து விவசாயம் செய்து கட்டிடங்களை அமைத்து பாரிய அளவில் பண்ணைகளாக மாற்றி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இவை அனைத்தும் வன பரிபாலன சபைக்கு சொந்தமான காணிகள். 

இன்று வட கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளுக்குள் தமிழ் பண்ணையாளர்கள் மற்றும் தமிழ் விவசாயிகள் சிறிய கத்தியை எடுத்துக்கொண்டு சென்றாலும் கூட உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்து பாரிய நெற்குவாரங்களை கொடுக்க வன பாதுகாப்பு திணைக்களம் இந்த பிரதேசத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தனியார் ஒருவர் யானை வேலி கூட அமைத்து வைத்திருக்கின்றார்.

Advertisement

 இவை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான காணிகள்.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பட்டிப்பளை எல்லையிலே இந்த காணி அபகரிப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை தொடர்ச்சியாக பேசிக் கொண்டு வந்து விடையங்கள். அந்த நேரத்தில் நாங்கள் வந்து பார்வையிட்டத்தின் பின்பு ஒரு சில விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும் கூட அந்த நேரத்தில் இருந்து பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் இந்த விடயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையாக மறுத்தார்கள்.

 ஏனென்றால் பெரும்பான்மை சமூகத்தினுடைய குடியேற்ற திட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை.

Advertisement

இன்று புதிய அரசாங்கம் வந்திருக்கின்றது அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கூட இந்த மேய்ச்சல் தரைக்குள் இவ்வாறான அடாவடித்தனமாக பயிர்கள் செய்வார்களா இருந்தால் கால்நடை வைத்திருக்கின்ற பண்ணையாளர்கள் அடுத்த கட்டமாக எங்கே போவது.

அனுரகுமார திசாநாயக்க அவர்களுடைய அரசாங்கத்தின் கீழே இந்த விடயங்கள் தொடருமாக இருந்தால் இன்று வடக்கு கிழக்கிலும் சரி இனி இடங்களிலும் சரி அனைத்து மக்களையும் சரிசமமாக பார்த்து செயல்படுவார் என நினைத்து வாக்களித்தாலும்கூட அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த விடயங்கள் தொடர்கின்றது. 

 சிலர் கூறலாம் அவர் ஆட்சிக்கு வந்து இப்போது தான் இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் என்று ஆனால் இந்த விடயங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்டு. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும் கூட இந்த விடயம் இன்று வரை அவ்வாறாகவே கண்முன்னாக இருக்கின்றது.

Advertisement

அந்த வகையில் இது உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் போடப்பட்ட யானை வேலிக்கு உள் காணியினை சுத்தப்படுத்தி விவசாயம் செய்கின்றார்கள். 

யானை வேலி போடுவதன் நோக்கமே இதற்கு மறுபக்கம் வன பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தம் என்பதனால்.

இந்த யானை வேலிக்கு உட்பகுதியில் வந்து அவர்கள் விவசாயம் செய்திருப்பதனால் தாங்களாகவே யானை வேலிகளை அமைத்திருக்கின்றார்கள். 

Advertisement

 எமக்கு இங்கே இருக்கின்ற பண்ணையாளர்கள் கூறுகின்றார்கள் இந்த காட்டுப் பகுதிக்குள் ஒரு எஸ்கவேட்டர் இயந்திரத்தினையும் ஒளித்து வைத்திருப்பதாக. அதனை வைத்து தான் காட்டை ஒதுக்குகிறார்கள். சாதாரணமாக தமிழர்கள் ஒருவர் ஒரு சிறிய கத்தியை காட்டுப்பகுதிக்குள் கொண்டு போக முடியாத நிலையிலே இன்று எஸ்கவேட்டர் இயந்திரத்தின் மூலம் காடுகளை அழித்து பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை இல்லாமல் செய்து காணிகளை அபகரிப்பு செய்யும் வரைக்கும் இவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று எமக்கு பாரிய சந்தேகம் இருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பி வன பாதுகாப்பு திணைக்களம் தூங்குகின்றதா என்ற கேள்வியையும் நாங்கள் எழுப்ப வேண்டும். பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வன பாதுகாப்பு திணைக்களத்தின் நீதி ஒரு மாதிரியாக செயற்படுகின்றது. 

 இங்கே இருப்பவர்கள் மாபியாக்கள். இங்கு இருப்பவர் ஒருவர் கூறுகின்றார் இந்த பகுதியில் தனக்கு பல ஏக்கர் காணிகள் இருப்பதாகவும் இப்பகுதியில் மாமரம் மற்றும் கொய்யா மரம் போன்றவை பயிரிட்டு இருப்பதாகவும் வயல் செய்வதாகவும் கூறுகின்றார் ஒரு தனி நபர். இவர் அம்பாறையில் இருந்து வந்து இங்கு செய்கின்றார். 

Advertisement

இங்கு சிங்களவர்கள் வந்து 10 அல்லது 15 பேர்ச் எடுத்து செய்யவில்லை. இந்த பிரதேசத்தில் காணிமாபியா ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது.

அந்த வகையில் மூன்று மாடி கட்டிடம் கூட அமைத்திருக்கின்றார்கள். இந்த கட்டிடம் அமைக்கும் வரைக்கும் வன பாதுகாப்பு திணைக்களம் எதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் உடனடியாக சட்டவிரோதமான செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். 

மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக இருந்தால் இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன