நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 18/01/2025 | Edited on 18/01/2025

விஷால் தற்போது துப்பறிவாளன் 2 பட பணிகளில் பிஸியாக இருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மதகஜராஜா படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையொட்டி நடந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் தனது அடுத்த படங்கள் குறித்து அறிவித்திருந்தார். அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்திலும் இடையே துப்பறிவாளன் 2 படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறினார். அதே சமயம் சுந்தர்.சி. இயக்கத்தில் மீண்டும் நடிக்க விருப்பப்படுவதாக தெரிவித்த அவர், சுந்தர்.சி கூப்பிட்டால் எல்லாத்தையும் தள்ளிவைத்துவிட்டு அடுத்த நாளே கிளம்பி போய்விடுவதாக சொன்னார். 

Advertisement

அதோடு சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி மூன்று பேரின் காம்போவில் மீண்டும் ஒரு படம் வந்தால் வரவேற்பு இருக்கும் என மக்கள் சொல்வதாக கூறினார். பின்பு இந்த சூழலில் ஆம்பள படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.