Connect with us

பொழுதுபோக்கு

புன்னகையுடன் பறந்து சென்றார்: மிஸ் யூ மா… அம்மா மரணம் குறித்து வி.ஜே. அர்ச்சனா உருக்கம்!

Published

on

VJ Archana

Loading

புன்னகையுடன் பறந்து சென்றார்: மிஸ் யூ மா… அம்மா மரணம் குறித்து வி.ஜே. அர்ச்சனா உருக்கம்!

தமிழ் சின்னத்திரையின் முக்கிய தொகுப்பாளினியாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான அர்ச்சனா, தனது அம்மா மரணமடைந்துவிட்டதாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழ் சின்னத்திரையில், அர்ச்சனா பிரபல தொகுப்பாளினியாக வலம் வருகிறார். பல தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.  பல நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் பங்கேற்றுள்ளார். இவரது வாழ்க்கை காமெடி டைம் (சன் டிவி) நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த நகைச்சுவை நிகழ்ச்சி மிகப் பெரிய வெற்றி பெற்றது.விஜே அர்ச்சனா நிகழ்ச்சியில் தனது பங்கேற்பிருக்காக அதிக அங்கீகாரத்தைப் பெற்றார். ‘என் வழி தனி வழி’ படத்தில் நடித்த அர்ச்சனா, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, டாக்டர் படத்தில் தனது மகளுடன் இணைந்து நடித்திருந்தார். நான் சிரித்தால் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஆகியோருடன் நடித்திருந்த அர்ச்சன,  கடந்த 2004-ம் ஆண்டு. வினீத் முத்துக்கிருஷ்ணன் என்பவரை மணந்தார்.இந்த தம்பதிக்கு, ஜாரா வினீத் என்ற பெண் குழந்தையும் உள்ளது. தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பதோடு, தனது வாழ்க்கையைப் பற்றி ரசிகர்களுக்கு அப்டேட் செய்து வருகிறார். மேலும் தன்னை போலவே தனது மகளையும் தொகுப்பாளினியாக மாற்றியுள்ள அர்ச்சனா, அவருடன் இணைந்து ஜீ தமிழின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இதனிடையே, அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அவள் அப்பாவுடன் “சந்தோஷமாக” வாழ மணப்பெண்ணைப் போல அவளது ஒளிரும் புன்னகையுடனும், மெல்லிய கண்களுடனும், உதடுகளுடனும் பறந்து சென்றார்! மிஸ் யூ மா என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் தனது அப்பா அம்மா எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.அர்ச்சனாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்சன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அர்ச்சனாவுக்கு தங்களது ஆறுதல்களையும் கூறி வருகின்றனர். நடிகை தீபா வெங்கட், ரச்சிதா மகாலட்சுமி, தங்களது இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளனர். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன