டி.வி
பெட் ரூம்க்கு ஃபிங்கர் ப்ரிண்ட் லாக்: லைட் செலவு 10 லட்சம்; ஆல்யா மானசா ஹோம் டூர் வீடியோ வைரல்!

பெட் ரூம்க்கு ஃபிங்கர் ப்ரிண்ட் லாக்: லைட் செலவு 10 லட்சம்; ஆல்யா மானசா ஹோம் டூர் வீடியோ வைரல்!
சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து பல பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது, அவர்களின் ஹோம் டூர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் ரீல் ஜோடியாக இணைந்து பின்னாளில் வாழ்க்கையிலும் இணைந்தவர்கள் ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடி. இருவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் ராஜா ராணி சீரியலை தொடர்ந்து சஞ்சீவ் தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா பிரசவம் காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், அதன்பிறகு, சன்.டிவியின் இனியா என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த சீரியல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், முடிவுக்கு வந்தது. தற்போதுவரை எந்த சீரியலிலும் கமிட் ஆகாத ஆல்யா மானசா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். ராஜா ராணி சீரியல் மூலமே தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.தற்போது கலாட்டா தமிழ் யூடியூப் சேனலில், ஆல்யா சஞ்சீவ் தம்பதி புதிதாக கட்டியுள்ள வீடு தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீட்டை பற்றி பேசும் ஆல்யா மானசா, இந்த வீட்டில் எனது ஐடியா எதுவும் இல்லை. எல்லாமே இவரோடது தான் என்று சொல்ல, அதை கேட்ட சஞ்சீவ், ஒருநாள் இவர் என்னிடம் திடீரென நன்றி சொன்னார், ஏன் எதற்காக என்று கேட்டபோது, நான் ரசிக்கும் வகையில் இந்த வீட்டில் ஒரு டிசைன் பார்த்தேன் என்று சொன்னதாக கூறியுள்ளார்.இந்த வீட்டில் பல பகுதிகள் வுட்டால் செய்யப்பட்டுள்ளது. வீடு முழுவதும் கருப்பு அதிகமாக தென்படும். அதேபோல், விலை அதிகமான பொருட்கள் வாங்குவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. என் ஹஸ்பெண்ட், ரொம்பவும் கம்மி விலையில் குவாலிட்டியான பொருட்களை மட்டும் தான் தேர்வு செய்வார் என்று ஆல்யா சொல்ல,. ஒரு லைட்டுக்கு 10 லட்சம் என்று சொல்கிறார்கள், ஆனால் இந்த வீ்ட்டில் உள்ள மொத்த லைட்டுக்கும் அந்த விலை தான் என்று சஞ்சீவ் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டில் என்ன பியானோவில் சஞ்சீவ் வாசித்து காட்டியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“