சினிமா
லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள விடாமுயற்சி பட அப்டேட் ..! மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்

லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள விடாமுயற்சி பட அப்டேட் ..! மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்
மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரெயிலர் நேற்று முன்தினம் மாஸாக வெளியாகி வரவேற்கப்பட்டிருந்தது.அஜித் ,திரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.அனிருத் இசையில் இப் படத்தின் முதலாவது பாடலான “sawadika” பாடல் வெளியாகி ஆரம்பத்தில் ஆவேசம் பட பாடல் போன்று இருப்பதாக ட்றோல் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது உலகெங்கிலும் வைரலாகி 200k அதிகமான மக்களால் reel செய்யப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தற்போது இப் படத்தின் அப்டேட் ஒன்றினை லைகா நிறுவனம் தனது x தளத்தில் பதிவிடுள்ளது.என்னவெனில் இப் படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை காலை 10.45 வெளியாகும் என அறிவித்துள்ளது.இப் பாடலினை விஷ்ணுஏடவன் எழுதியுள்ளதுடன் rap பாடகர் அமோஜ் பாலாஜி பாடியுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.