விளையாட்டு
ICC Champions Trophy 2025: சஞ்சு, பண்ட்… இந்திய அணியில் யார் யாருக்கு இடம்?

ICC Champions Trophy 2025: சஞ்சு, பண்ட்… இந்திய அணியில் யார் யாருக்கு இடம்?
India’s ICC Champions Trophy 2025 Squad Announcement Live Updates: 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் படிக்கவும்: India’s ICC Champions Trophy 2025 Squad Announcement Live Updatesபிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.இந்திய கிரிக்கெட் அணி இந்த நிலையில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியலை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மூத்த தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ தலைமையகத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கின்றனர்.