பொழுதுபோக்கு
எஸ்.பி.பி இசை: பாடல் பாட வந்து பாடாய் படுத்திய யேசுதாஸ்; இந்த பாட்டு இப்போவும் ஹிட்டு

எஸ்.பி.பி இசை: பாடல் பாட வந்து பாடாய் படுத்திய யேசுதாஸ்; இந்த பாட்டு இப்போவும் ஹிட்டு
தனது இனிமையான குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அப்படி அவர் இசையமைத்த ஒரு படத்திற்கு பாடகராக வந்த கெ.ஜே.யேசுதாஸ், அவரை பாடாய் படுத்தி எடுத்துள்ளார்.இந்திய சினிமாவில் முன்னணி படகராக பல மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எம.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்..ரஹ்மான் வரை பல இசையமைப்பளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ள இவர், தமிழ் மட்டுமல்லமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.எம்.ஜி.ஆ நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் படகராக அறிமுகமான எஸ்.பி.பி, நடிகராகவும், டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். சிற்பிக்குள் முத்து என்ற படத்தில், கல்ஹாசனுக்கே குரல் கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பல திறமைகளை உள்ளடக்கிய எஸ்.பி.பி சில படங்களுக்க இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.அந்த வகையில், கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் சிகரம். கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த இந்த படத்தை அனந்து இயக்கியிருந்தார், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், ரேகா, ராதா ஆகியோருடன், சார்லி, ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன், நிழல்கள் ரவி, ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படத்திற்க எஸ்.பி.பாலசுப்பிரமணியனே இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருந்தார், பாடல்கள் அனைத்தும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருந்தார்.இந்த படத்தில் வரும் முக்கிய பாடல் அகரம் இப்போ சிகரம் ஆச்சு என்ற பாடல் தான். வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கம் வகையில் அமைந்த இந்த பாடலுக்கு அருமையாக இசையமைத்த எஸ்.பி.பி இந்த பாடலை பாட, கே.ஜே.யேசுதாஸை அழைத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்ற யேசுதாஸ் பாடல் பதிவுக்கு வந்தபோது அவரின் காலில் விழுந்து வரவேற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பாடல் பதிவை தொடங்கியுள்ளார்.அப்போது பாடலை முதல்முறை பாடி முடித்த யேசுதாஸ் என்ன பாலு ஓகே வா என்று கேட்க, சூப்பர் அண்ணே என்று எஸ்.பி.பி கூறியள்ளார். ஆனால் இது பத்தாதுப்பா நான் இன்னொரு முறை பாடுகிறேன் என்ற யேசுதாஸ் மீண்டும் படலை பாடியுள்ளார். அதன்பிற பாலு ஓகேவா என்று கேட்க, எஸ்.பி.பி மீண்டும் சூப்பர் அண்ணே என்ற சொல்ல, உனக்கு திருப்தியா இருக்கும் ஆனா எனக்கு திருப்தி இல்லை என்ற கூறி யேசுதாஸ் மீண்டும் ஒருமுறை பாடலை பாடியுள்ளார்.3-வது முறையும் யேசுதாஸ் அப்படியே கேட்க. எஸ்.பி.பி அப்படியே சொல்ல,நீ முதன் முதலில் இசை அமைக்கிறாய், உனது இசையில் நான் பாடுகிறேன் அது சிறப்பாக வரவேண்டும் அல்லவா எனற சொல்லி மீண்டும் பாடியுள்ளார். ஒரு கட்டத்தில், எஸ்.பி.பி போதும் அண்ணே என்று சொன்னபிறகு பாடல் பதிவு முடிந்துள்ளது. இந்த பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. .“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“