சினிமா
கதை இன்னும் முடியல தொடருது பாரு…! விடாமுயற்சி இரண்டாவது பாடல் இணையத்தில் வைரல்!

கதை இன்னும் முடியல தொடருது பாரு…! விடாமுயற்சி இரண்டாவது பாடல் இணையத்தில் வைரல்!
பிரபல நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் இப் படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் மாஸாக வெளியாகி வைரலானது. அஜித் ,திரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே சாவடிகா பாடல் வெளியாகி உலகெங்கும் வைரலானது. இந்நிலையில் தற்போது இப் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ” பத்திக்கிச்சு.. ” என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை விஷ்ணுஏடவன் எழுதியுள்ளதுடன் rap பாடகர் அமோஜ் பாலாஜி பாடியுள்ளார். இணையத்தில் வெளியான இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இதனை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.