Connect with us

சினிமா

திரையுலக சங்கத்தினர் எந்த பொந்தில் அமுங்கி உள்ளனர்? மிஷ்கின் தொடர்பில் கொந்தளித்த பிரபலம்

Published

on

Loading

திரையுலக சங்கத்தினர் எந்த பொந்தில் அமுங்கி உள்ளனர்? மிஷ்கின் தொடர்பில் கொந்தளித்த பிரபலம்

‘பாட்டில்  ராதா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசிய விடயங்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.. பா. ரஞ்சித் இயக்கிய  இந்த படத்தில் குரு சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ளார்.இந்த நிலையில், பாட்டில் ராதா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிஷ்கின் தன்னை பெரிய குடிகாரன் என்றும், வெற்றிமாறன் அமீர் குடிப்பதில்லை என்றும் பேசியதோடு, ஆபாச பேச்சுக்களையும் பேசியுள்ளார். ஆனால் இவருடைய பேச்சுக்களை யாரும் ஏன் கண்டிப்பதில்லை என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.d_i_aஇது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தல பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், மேடையேறிய ஆபாச பேச்சாளர் மிஷ்கின் தன்னை பெரிய குடிகாரன் என்றும்.. வெற்றி மாறன், அமீர் குடிப்பதில்லை என்றும் கூறினார்.பிறகு இளையராஜாவை ஒருமையில் பேசிவிட்டு.. பலமுறை ‘ஓ’வில் ஆரம்பிக்கும் மூன்றெழுத்து வார்த்தையை ஓயாமல் உச்சரித்தார். அதனினும் மோசமான சில வார்த்தைகளும் வந்து விழுந்தன.மேடையில் இருந்த படக்குழுவினர், இயக்குனர்கள் மற்றும் எதிரில் அமர்ந்திருந்த பலரும் சிரித்து மகிழ்ந்தனர். இவர்களில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லிங்குசாமிகளும் அடக்கம்.இவருக்கு ஆயிரம் புத்தகங்கள் படித்த அறிவும், உலக சினிமா ஞானமும் இருந்தென்ன பயன்?பத்திரிக்கையாளர்கள் நிகழ்வில்.. அதுவும் பெண்கள் இருக்கும் அரங்கில் இப்படி ஆபாசமாக போசுவதை இவர் வாடிக்கையாக கொண்டிருப்பதை சக இயக்குனர்கள் பல்லை இளித்தபடி உற்சாகப்படுத்துவது ஏன்?இளம் தலைமுறைக்கு இப்படி ஒரு மூன்றாம்தர முன்னுதாரண நபரால் என்ன பயன்?இந்த நானும் ரவுடிதான் நபரை ஏன் அதே மேடையில் யாரும் கண்டிப்பதில்லை? இப்படி இவர் முன்பு பேசும்போது.. அந்நிகழ்ச்சிகளை பத்திரிக்கையாளர்கள் புறக்கணித்துஇருந்தால்.. இந்நேரம் அமைதியாகி இருப்பார்.ரோபோ சங்கர், கூல் சுரேஷ் அல்லது ஏதேனும் சிறுபடத்தை சேர்ந்த ஒருவர் இப்படி பேசும்போது பத்திரிக்கையாளர்கள் ஓங்கி குரலெழுப்பி கண்டிப்பதுண்டு.மன்னிப்பும் கேட்க சொல்வார்கள்.ஆனால் மிஷ்கினை மட்டும் எதுவும் கேட்காமல் இருப்பது ஏன்? மன்னிப்பு கேட்க வைத்திருக்கலாமே?இவர் பேசும் கெட்ட வார்த்தைகளை ம்யூட் கூட செய்யாமல் அப்படியே யூட்யூபில் அப்லோட் செய்வது ஏன்?நாகரீக விமர்சனம் பற்றி பாடமெடுக்கும் தனஞ்செயன், திருப்பூர் சுப்ரமணியம் போன்றோர்… மிஷ்கினின் ஆபாச பேச்சுகள் குறித்து வாய் திறக்காமல் எந்த பொந்தில் அமுங்கி உள்ளனர்?திரையுலக சங்கங்கள் இந்த selfmade pseudo வஸ்தாதை கண்டிக்க இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும்ஃ? என சரமாரியாக விளாசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன