Connect with us

வணிகம்

நெருங்கும் தைப்பூசம்; கோவையில் சூடுபிடித்த முருகன் சிலை, வேல் விற்பனை

Published

on

murugan vel

Loading

நெருங்கும் தைப்பூசம்; கோவையில் சூடுபிடித்த முருகன் சிலை, வேல் விற்பனை

தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன.பண்டையத் தமிழர்கள் வேலை ஆயுதமாகப் பயன்படுத்தினர். “வெற்றிவேல், வீரவேல்” என்பது அக்காலத்துப் போர்க்களங்களில் முழங்கப்படும் முழக்கமாக இருந்தது. தற்காலத்திலும் முருகன் கோவில் திருவிழாக் கால ஊர்வலங்களில் கடவுளைப் போற்றும் வகையிலும் பக்தர்களை உற்சாகப்படுத்தவும் இம்முழக்கம் முழங்கப்படுகிறது.கந்த புராணத்தில் முருகனுக்கும், சூரபத்மனுக்கிடையே நடந்த போரில், வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபத்மனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் அசுரன், முருகனின் கண்களில் படாமலிருக்க ஒரு பெரிய மாமரமாக மாறி விடுகிறான். ஆனால் அவனது சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட முருகன் தனது வேலை எறிந்து மாமரத்தை இரண்டாகப் பிளக்க, அதில் ஒரு பாதி சேவலாகவும் மறுபாதி மயிலாகவும் மாறிவிடுகிறது. இப்படி பல சிறப்புகள் கெண்ட வேல் மற்றும் முருகன் சிலை விற்பனை கோவை பூம்புகாரில் சூடுபிடித்துள்ளது. தை பூசம் நெருங்கி வரும் நிலையில், முருகன் மீது பக்தி கொண்டவர்கள் வழிபாடு மற்றும் நேரத்தி கடனுக்காக வேல் மற்றும் முருகன் சிலைகளை வாங்கி செல்கின்றனர்.வெண்கலம், பித்தளை, ஐம்பொன் என பல உலோகங்களில் ஓரு இன்ச் முதல் ஐந்து அடி வரை காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் கைகளினால் செய்ப்பட்டவை. சேவல், மயில், ஒம் போன்ற அச்சுக்களை பொரி்த்த வேல்களை அதிக அளவு வாங்கி செல்வதாக இது குறித்து விற்பனை பிரிவு மேலாளார் மாலதி தகவலாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பி.ரஹ்மான், கோவை 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன