சினிமா
முருகனிடம் மொத்தமாய் சரணடைந்த டிடி…! பக்தி பூர்வமாக வெளியிட்ட புகைப்படம் வைரல்…

முருகனிடம் மொத்தமாய் சரணடைந்த டிடி…! பக்தி பூர்வமாக வெளியிட்ட புகைப்படம் வைரல்…
சினிமாத்துறையில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவயதர்ஷினி. இவர் பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். அப்படி ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினியாக இன்று வரைக்கும் இருக்கிறார். 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அவ்வளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை. ஆனால் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பார். இந்நிலையில் கிளாமர், மார்டன் உடைகளில் கலக்கிய டிடி தற்போது பக்தி பரவசத்துடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். டிடி பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு அப்படியே தனது லுக்கை மாற்றி பக்தி மயமாக காணப்படுகிறார்.மேலும் அந்த பதிவில் “முருகன் சாமியிடம் எனக்குப் பிடித்த ஒன்று இருக்கிறது, அவரைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.