சினிமா
ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த வாரம் காதலிக்க நேரமில்லை படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தனது மனைவியிடம் இருந்து பிரியப்போவதாக அறிவித்தார். இதன்பின் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டுமென, குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதில் ரவி மற்றும் ஆர்த்தி இருவருமே காணொளி வாயிலாக ஆஜராகினர். இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர் இன்று அழைத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார்.உடனே நீதிபதி சமரச பேச்சு வார்த்தையை நிறைவு செய்த பின்னர், வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று கூறி ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கை, பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளி வைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.