Connect with us

சினிமா

அடுத்த வெற்றி ஐரோப்பாவில்! கார் பந்தைய முதல் சுற்றில் தேர்வு! கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

Published

on

Loading

அடுத்த வெற்றி ஐரோப்பாவில்! கார் பந்தைய முதல் சுற்றில் தேர்வு! கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

பிரபல நடிகர் அஜித் குமார் படங்களில் நடிப்பதை தாண்டி கார் ரேசில் பங்குபற்றுவதை தனது பெஷனாக வைத்துள்ளார். இந்தியாவுக்காக ஜெயிக்க வேண்டும் என்பதே அவரின் லச்சியம். இந்நிலையில் சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேசில் அணியுடன் பங்கு பற்றி வெற்றி பெற்றார். தற்போது ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேசில் கலந்து கொண்டதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.   விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இவரின் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் ரிலீசாக இருக்கும் நேரத்தில் துயாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் ‘அஜித் குமார் ரேசிங் அணி’ கலந்துகொண்டு மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில் நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அடுத்ததாக தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025 ரேஸில் பங்கேற்றுள்ளார். ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார். இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார். போட்டிக்கு முன்னர் 5 முறை நடைபெற்ற பயிற்சி சுற்றுகளில் இது அவரது தனிப்பட்ட சாதனை என்று அஜித்குமார் ரேசிங் குழுவின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அஜித்துக்கு வாழ்த்து சொல்வதுடன் கொண்டாடிவருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன