இலங்கை
அதிகாரத்தை பகிரக்கூடாது! தம்மரதன தேரர் தெரிவிப்பு

அதிகாரத்தை பகிரக்கூடாது! தம்மரதன தேரர் தெரிவிப்பு
நாடும், அதிகாரமும் ஒன்றாகும். எனவே, அதிகாரத்தை பலப்படுத்த வேண்டுமே தவிர அதனைப் பகிரக்கூடாது என்று பேராசிரியர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் புதிய தலைமையக திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அதிகாரம் செலுத்துவதற்காக அதிகாரத்தைப் பெறக்கூடாது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே அதிகாரத்தைப் பெறவேண்டும். சிலர் அதிகாரம் செலுத்துவதற்காகவே அதிகாரத்தைப் பெறுவதால் இந்த விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க வேண்டியுள்ளது. அதிகாரம் என்பது அதிகாரத்துக்கானது அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரம் என்பது நாட்டுக்கானது.
அதேபோல அதிகாரம் என்பது கைவிடுதற்கோ அல்லது பகிர்வதற்கோ அல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் பகிர்ந்த பின்னர் அதிகாரம் இருக்காது. எனவே, அதிகாரம் என்பதை அதிகரித்துக்கொள்ள வேண்டும். வளங்கள் மற்றும் சேவைகளைத்தான் பகிர வேண்டும். நாட்டை பிரிக்கக் கூடாது. அதிகாரத்தைப் பிரிக்க கூடாது. நாடும், அதிகாரமும் ஒன்றாகும் – என்றார்.