இலங்கை
இ.போ.ச. அசமந்தம்; மக்கள் போராட்டம்!

இ.போ.ச. அசமந்தம்; மக்கள் போராட்டம்!
பயணிகளை நடுவீதியில் அந்தரிக்கவிட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ். சாலையின் அசமந்தப் போக்கைக் கண்டித்து பொதுமக்கள் நேற்றுப் போராட்டம் நடத்தினார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேருந்து, நுணாவில் மேற்குப் பகுதியில் நேற்று பழுதடைந்து நின்றுவிட்டது. மாலை 4 மணியளவில் பேருந்து பழுதடைந்த போதிலும் இரவு 7 மணியாகியும் மாற்று ஏற்பாடுகள் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ். சாலையால் மேற்கொள்ளப்படவில்லை.
இதையடுத்தே, ஏ9 வீதியால் சென்ற வாகனங்களை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். பொலிஸாரின் தலையீட்டைத் தொடர்ந்தே போராட்டம் கைவிடப்பட்டதுடன், போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.