சினிமா
எக்கச்சக்கமான பிசினஸை கைவசம் வைத்துள்ள ராம் சரணின் மொத்த சொத்து இத்தனை கோடியா?

எக்கச்சக்கமான பிசினஸை கைவசம் வைத்துள்ள ராம் சரணின் மொத்த சொத்து இத்தனை கோடியா?
தெலுங்கில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்த நடிகர்களுள் ஒருவர் தான் ராம் சரண். இவர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்தார். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி உலக அளவில் வெளியிடப்பட்டது. ஆனாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்தது.d_i_aஇந்த நிலையில், ராம் சரணின் சொத்து மதிப்பு மற்றும் அவர் வேற என்ன தொழில்களில் ஈடுபட்டுள்ளார் என்பன பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர்களும் பல படங்களை தயாரித்து உள்ளார்.அந்த வகையில் பல பிராண்டுகளுக்கு அம்பாசிஸ்டராக ராம்சரண் பணியாற்றி வருகின்றாராம். இவர் தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் காணப்படுகின்றார். அதன்படி இவருடைய சொத்து மதிப்பு சுமார் 1370 கோடி என கூறப்பட்டுள்ளது.இதனால் பல்வேறு துறைகளில் இவற்றை முதலீடு செய்வதன் மூலமும், பிராண்டுகளுடன் முதலீடு செய்வதனாலும் ராம் சரணின் வருமானம் அதிகரித்துள்ளது. மேலும் இவர் பிஷ்னஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி, ப்ரொடக்ஷன் ஹவுஸ், ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்துள்ளார்.மேலும், 2016 ஆம் ஆண்டு கொனிடேலா என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இதில் கிட்டத்தட்ட மூன்று படங்களை தயாரித்து உள்ளார்.. மேலும் வி மெகா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவி உள்ளார். இந்த நிறுவனத்தில் தி இந்தியா ஹவுஸ் என்ற படத்தை முதலாவது படமாகவும் அறிவித்தது.இதை தொடர்ந்து டர்போ மேகா ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பிராந்திய விமான நிறுவனத்தின் விளம்பரதாரராக நிறுவப்பட்டுள்ளார். எனினும் 2022 இல் இந்த விமானம் நிறுவனம் அதன் செயல்பாடுகளை நிறுத்தி உள்ளது.இறுதியாக ராம் சரண் தி டெவில்ஸ் சர்க்யூட் என்ற சாகச பயணத் தொடரின் இணை உரிமையாளர் எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.