இலங்கை
சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து

சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து
பதுளை , பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தை பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து இன்று (20) அதிகாலை 04.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
பண்டாரவளை பொலிஸார் மற்றும் பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.