Connect with us

சினிமா

சரியான நேரத்தில் சத்யா செய்த உதவி! பிக்பாஸ் மூலம் கிடைச்ச உறவு! நெகிழ்ச்சியில் ரசிகர்!

Published

on

Loading

சரியான நேரத்தில் சத்யா செய்த உதவி! பிக்பாஸ் மூலம் கிடைச்ச உறவு! நெகிழ்ச்சியில் ரசிகர்!

விஜய் டிவி தொலைக்காட்சியில் சுவாரஷ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட சத்யா குறித்து ஒரு ரசிகர் பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து பார்ப்போம்.பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கு பற்றியவர் சின்னத்திரை நடிகர் சத்யா. இவர் பிக்பாஸ் வருவதற்கு முன்னர் பல சீரியல்களில் நடித்துள்ளார். அத்தோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அண்ணா சீரியலில் வில்லன் ரோலில் நடித்து வந்தார். அதிலிருந்து விளங்கிய பின்னர் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் பிக்பாஸ் ரசிகர் ஒருவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ” நிறைய பேர் என்கிட்ட கேட்ட ஒரு கேள்வி சத்யா பிக்பாஸ் வீட்டுல என்ன பண்ணுனாரு? ஏன் சப்போட் பண்ணுறிங்கனு?  கேக்குறாங்க. அதுக்கு காரணம்  ஒரு தடவை குழந்தைக்கு ஒப்பரேஷன் எமஜென்ஷி முடியும் என்றால் உதவி பண்ணுங்க என்று சொல்லி நான் போஸ்ட் போட்டேன். நிறைய பேர் கிட்ட ஹெல்ப் கேட்டேன் பண்ணவில்லை. ஆனா நான் போட்ட போஸ்ட் பாத்துட்டு சத்யா அண்ணா மற்றும் அவங்க மனைவி அதை ஸ்டோரில ஷேர் பண்ணாங்க அதோட நான் அவங்ககிட்ட பணம் கேட்கவே இல்லை அவங்களா பணம் கொடுத்து சரியான நேரத்துல உதவி செய்தாங்க” என்று பதிவிட்டுள்ளார்.மேலும் “ஒருத்தவங்க தப்பு பண்ணுனா தான் நாம நெகட்டிவா பேசுறோம். நல்லது பண்ணுனா கண்டுக்கமாட்டோம். பிக்பாஸ்ல இருக்குற 100 நாள் வச்சி அவங்க கேரக்டர தீர்மானிக்காதிங்க. வீட்டுக்கு உள்ள அவங்க கேம் விளையாடுறாங்க. வெளிய நிறைய நல்லது பண்ணிட்டு தான் இருக்காங்க பிக்பாஸ் 8 மூலமா எனக்கு கிடைச்ச உறவுகள் என்றால் அது சத்யா அண்ணா, ரம்யா அக்கா தான் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த விடயம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன