Connect with us

சினிமா

நெஞ்சத்தைக் கிள்ளாதே பஞ்சாயத்து! மன உளைச்சலில் ரேஷ்மா! அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்!

Published

on

Loading

நெஞ்சத்தைக் கிள்ளாதே பஞ்சாயத்து! மன உளைச்சலில் ரேஷ்மா! அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் திடீரென குறுகிய காலத்திலே  விட்டது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ஹீரோவின் நலன் கருதி சீரியல் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஹீரோவை பற்றி யோசித்த நீங்கள் என் ஹீரோயினியை பற்றி யோசிக்கவில்லை என்று சோசியல் மீடியாவில் ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் நடிகர் ஜெய் ஆகாஷ், ரேஷ்மா முரளிதரன் ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்துவந்தனர்.   குடும்ப சூழ்நிலை காரணமாக அதிக வயதை தாண்டிய ஹீரோ ஹீரோயின் திருமணம் செய்து கொள்வது அதை தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள் தான் இதன் கதைக்களம். இது இந்தியில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு சீரியல். இந்த சீரியல் சமீபத்தில் 148 எபிசோடுகளுடன் திடீரென நிறைவடைந்துள்ளது. இதற்கு ஜெய் ஆகாஷ் காலில் அடிபட்டது தான் காரணம் என சொல்லப்படுகிறது. வலியை பொறுத்து கொள்ள முடியாது என்ற கட்டம் வரும்போது ஜெய் ஆகாஷ் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவர் விலகியதால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்நிலையில் ஹீரோ பற்றி யோசித்த நீங்கள் ஹீரோயின் பற்றி யோசிக்கவில்லை என்று இணையத்தில் ரசிகர் ஒருவர் டுவிட் செய்துள்ளார்.அவர் கூறுகையில் “ரேஷ்மாவும் சீரியல் ரசிகர்களிடையே பிரபலமான ஹீரோயின் தான். அப்படி இருக்கும் பொழுது ஹீரோவை மாற்றிவிட்டு இந்த சீரியலை கொண்டு போய் இருக்கலாம். ஜெய் ஆகாஷ் ஒருவர் விலகியதற்காக ரேஷ்மாவை பொருட்படுத்தாமல் எப்படி சீரியலை நிறுத்தலாம்” என்று கேட்டுள்ளார். இதனால் இரண்டு பேரின் ரசிகர்களும் தங்களுடையே  மாற்றி மாற்றி கருத்து மோதலாகள் நடந்து வருகிறது. ரேஷ்மாவும் ஜீ தமிழ் சேனலுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடுபவர்களை ஆதரித்து வருகிறார். இதனால் ரேஷ்மாவும் இந்த செயலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெளிவாகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன