Connect with us

இலங்கை

பிரிட்டிஷ் பெண்ணொருவரின் அட்டையை திருடி மோசடி!

Published

on

Loading

பிரிட்டிஷ் பெண்ணொருவரின் அட்டையை திருடி மோசடி!

  பிரிட்டிஷ் பெண்ணொருவரின் வங்கி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேகநபர் ஹட்டன் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே நேற்று (19) கைது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டிஷ் பெண்ணின் வங்கி அட்டையை, ஹட்டன் மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்தே இவர் கொள்ளையடித்துள்ளார்.

கொள்ளையிட்ட வங்கி அட்டை ஊடாக ஹட்டன் நகரில் தங்கை நகை, தொலைபேசி, ஆடை உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்துள்ளார்.

அதோடு தங்க நகையை ஹட்டனிலுள்ள தனியார் அடகு பிடிக்கும் நிலையமொன்றில் அடகு வைத்து 78 ஆயிரம் ரூபா பெற்றுள்ளார்.

Advertisement

தனது வங்கி அட்டை களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் எல்ல சுற்றுலாப் பொலிஸாரிடம் குறித்த பெண் முறையிட்ட நிலையில் அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணை வேட்டையில் இறங்கிய ஹட்டன் பொலிஸார், வாடகை வாகனமொன்றில் எல்ல நோக்கி பயணமாக தயாராகிக்கொண்டிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

களவாடிய வங்கி அட்டையில் இருந்து வாங்கிய பொருட்களையும் மீட்டனர்.

Advertisement

பிரிட்டிஷ் பெண்ணை ஹட்டன் வரவழைத்து, வங்கி அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் , கடைகளில் வாங்கிய பொருட்கள் மீள வழங்கப்பட்டு அதற்குரிய பணமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன