Connect with us

இலங்கை

முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்துக்கும் ஆப்பு

Published

on

Loading

முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்துக்கும் ஆப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் வெகுவிரைவில் இரத்துச் செய்யப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படவுள்ளது. அத்துடன், இனிவரும் நாள்களில் நாடாளுமன்ற உணவகத்தில் சலுகை விலையில் உணவுகள் வழங்கப்படாது. வெளியில் என்ன விலைக்கு பொதுமக்களுக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றனவோ, அதே விலைக்குத்தான் நாடாளுமன்ற உணவகங்களிலும் உணவுகளைப் பெறக்கூடியதாக இருக்கும் – -என்றார்.

Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்களில் மானிய விலையிலேயே இதுவரை உணவு வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன