Connect with us

இலங்கை

மொரட்டுவை பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை

Published

on

Loading

மொரட்டுவை பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை

  மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே இன்று (20) காலை ,அப்பகுதியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டமைக்கு, பொதுமக்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மொரட்டுவை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் முன் குழுவொன்று பந்தல் ஒன்றை அமைத்து வீதியை மறித்ததால் அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

போக்குவரத்து பொலிஸார் பந்தலை அகற்ற முற்பட்ட போது அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்குதலுக்குள்ளாகி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து தாக்குதல் மற்றும் குழப்பம் ஏற்படுத்தி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் ஐவர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவத்தை அடுத்து பதற்றத்த தணிக்க அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ உட்பட பல மதகுருமார்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன