Connect with us

உலகம்

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை; தொடரும் சம்பங்களால் நீடிக்கும் மர்மம்!

Published

on

Loading

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை; தொடரும் சம்பங்களால் நீடிக்கும் மர்மம்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 21/01/2025 | Edited on 21/01/2025

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள கொய்யாடா பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமெளலி. இவரது மகன் ரவி தேஜா (25). ரவி தேஜா கடந்த 2022ஆம் ஆண்டு தனது முதுகலை படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். தனது படிப்பை முடித்த ரவி தேஜா, அங்கேயே வேலை தேடி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் வாஷிங்டன் அவென்யூவில் ரவி தேஜா, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ரவி தேஜாவின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் பற்றிய விவரங்கள் இன்னும் தெளியாக வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Advertisement

ரவி தேஜாவின் திடீர் மரணம் ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநில அரசு தூதரகத்தைத் தொடர்புக் கொண்டு ரவி தேஜாவின் உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு மாணவர் அமெரிக்காவில் கொல்லப்பட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு ரவி தேஜா கொல்லப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான சாய் தேஜா நுகராபு, கடந்த நவம்பர் 30ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோ அருகே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மர்மமான முறையில் கொல்லப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • சவுக்கு தோப்பில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; இருவர் கைது

  • அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை; தொடரும் சம்பங்களால் நீடிக்கும் மர்மம்!

  • நிதி சேவைக்கான டிஜிட்டல் தளம்; பஜாஜ் பைனான்ஸ் உடன் இணைந்த பாரதி ஏர்டெல்!

  • ‘விஜய் செய்வது சரி என தமிழக அரசு புரிந்து கொள்ளும்’-எம்பி ஜோதிமணி கருத்து

  • இளம் எம்.பி.யை கரம் பிடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன