Connect with us

உலகம்

குவைத் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

Published

on

Loading

குவைத் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 21/01/2025 | Edited on 21/01/2025

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆசிப், முகமது ஜூனைத் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மற்றொருவரும் என மூன்று பேர் குவைத் நாட்டில் உள்ள அறை ஒன்றில் தங்கியிருந்தனர். இத்தகைய சூழலில்  தான் அங்கு நிலவி வரும் கடும் குளிர்காரணமக குளிர் காய்வதற்காக தீ மூட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் 3 பேர் அந்த அறையிலேயே உறங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அறையில் பரவிய புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூரைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் தீ புகையால் மூச்சு திணறி குவைத் நாட்டில் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement
  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • குவைத் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

  • “உடற்பயிற்சி கூடம் இஸ்லாமிய நெறிமுறைகளை மீறுகிறது” – கேரள அறிஞரின் கருத்தால் சர்ச்சை!

  • “வெளிநாட்டு கல்லூரிகளுக்கு நிகராக கூட்டுறவு கல்லூரி நுழைவு வாயில் உள்ளது” – அமைச்சர் ஐ.பெரியசாமி

  • மனைவியை நிர்வாணமாக நிற்க வைத்துக் கொடுமைப்படுத்திய கணவன்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  • அமைச்சர்கள் குறித்து இ.பி.எஸ். கடும் விமர்சனம்!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன