சினிமா
சூப்பரான குட் நியூஸ் சொன்ன பாண்டியம்மா.. ரோபோ சங்கர் பொண்ணுக்கு என்ன குழந்தை பிறந்திருக்கு தெரியுமா?

சூப்பரான குட் நியூஸ் சொன்ன பாண்டியம்மா.. ரோபோ சங்கர் பொண்ணுக்கு என்ன குழந்தை பிறந்திருக்கு தெரியுமா?
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு நேற்று இரவு குழந்தை பிறந்திருக்கிறது. ரோபோ சங்கரின் மகள் என்பதை தாண்டி இந்திரஜா ஒரு நடிகை ஆக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரீட்சையமானவர்.
டிக் டாக், இன்ஸ்டாகிராம் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அறிமுக படமே தளபதி விஜய் உடன் நடித்தார்.
திகில் படத்தில் இவர் நடித்த பாண்டியம்மா கேரக்டர் மக்களின் மனசில் நிலையாக நின்றது. இதை தொடர்ந்து விர்மன் படத்திலும் நடிகை அதிதி சங்கருக்கு தோழியாக நடித்திருந்தார்.
இந்திரஜா நடனம் ஆடுவதில் பலே கில்லாடி. ரோபோ சங்கர் மட்டுமில்லாமல் அவருடைய மனைவி பிரியாவும் தற்போது நடிப்பில் பயங்கரமாக கலக்கி வருகிறார்.
இந்திரா கல்லூரி முடிந்த உடனேயே தன்னுடைய உறவினர் கார்த்திகை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு மூன்று வாரங்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அந்த போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்கள்.
இந்திரஜாவின் வளைகாப்பு சமீபத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்திரஜா கார்த்திக் தம்பதிக்கு நேற்றிரவு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இதை கார்த்திக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.