Connect with us

பொழுதுபோக்கு

நடிகை தேவயானி இயக்கிய முதல் படம்… சர்வதேச திரைப்பட விழாவில் விருது

Published

on

Devayani award

Loading

நடிகை தேவயானி இயக்கிய முதல் படம்… சர்வதேச திரைப்பட விழாவில் விருது

நடிகை தேவயானி எழுதி இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ குறும்படத்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமா உலகில் 90-களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் இயக்குநர் ராஜ்குமாரனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு, சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நடிகை தேவயானி, டிவி சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில், நடிகை தேவயானி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். “கைக்குட்டை ராணி” என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி அவரே தயாரித்துள்ளார். இந்த குறும்படம் 17வது ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைக்கான குறும்படம் என்ற விருதை வென்றுள்ளது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இளையராஜா இசையமைத்துள்ளார். பி.லெனின்  படத்தொகுப்பு செய்துள்ளார். ராஜன் மிர்யாலா படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளார். லட்சுமி நாரயணன் மற்றும் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார்.தேவயானி இயக்கியுள்ள கைக்குட்டை ராணி 20 நிமிட குறும் படம். இந்த படத்தில், ஒரு சிறுமி அவளது தாயை இழந்த பிறகு அவள் எதிர்க்கொள்ளும் சூழலை இப்படம் பிரபளித்து காண்பித்து மிகவும் எமோஷனலாக அமைந்துள்ளது. நடிகர் சரத்குமார் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தேவயானியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.“தோழி நடிகை தேவயானி அவர்களுக்கு ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.முதல்முயற்சியில் வெற்றி பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துகள். உங்களுடைய கலைப்பயணத்தில் மற்றொரு மைல்கல் அத்தியாயமாக தொடரட்டும் உங்கள் இயக்குனர் பணி” என சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன