Connect with us

பொழுதுபோக்கு

விஜய் படத் தயாரிப்பாளர் தில் ராஜூ வீட்டில் ஐ.டி ரெய்டு… அவருக்கு சொந்தமான 8 இடங்களில் அதிரடி சோதனை

Published

on

IT RAID

Loading

விஜய் படத் தயாரிப்பாளர் தில் ராஜூ வீட்டில் ஐ.டி ரெய்டு… அவருக்கு சொந்தமான 8 இடங்களில் அதிரடி சோதனை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் தில் ராஜூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (ஜனவரி 21) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் விஜய் நடித்த வாரிசு, ராம் சரண் நடித்த தி கேம் சேஞ்சர் உள்ளிட்ட பெரிய பட்ஜெய் படங்களை தயாரித்துள்ளார். இவர் சமீபத்தில் தெலங்கானா திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.ஹைதராபாத்தில் உள்ள தில் ராஜூ வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தில் ராஜூவின் மகள் ஹன்சிதா ரெட்டி, சகோதரர் சிரிஷ் ஆகியோர் வீடுகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது.வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 35 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழு வருகை தந்து சோதனை நடத்தி வருகின்றனர்.மகர சங்கராந்தி வெளியீடாக தில் ராஜூ தயாரிப்பில் தி கேம் சேஞ்சர், சங்கராந்திகி வாஸ்துன்னம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இதில் தி கேம் சேஞ்சர் படம் எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில், சங்கராந்திகி வாஸ்துன்னம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை முதலே ரெய்டு நடைபெற்று வருகிறது.அதேபோல புஷ்பா 2 தயாரிப்பாளர் நவீன் எர்னேனிக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தயாரிப்பாளர் நவீன் எர்னேனி நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன